யாழில் பறிபோன 22, 24 வயது இளைஞர்களின் உயிர்கள்..!

146

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று (04) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதியதிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

22,24 வயதுடைய கரவெட்டி வடக்கைச் சேர்ந்த இளைஞர்களே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இருவரது சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.