வெலிக்கடை சிறைக்கைதி உயிரிழந்த சம்பவம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது!

117

வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மூன்று சிறைக்காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அதிகாரிகளால் மீண்டும் பிடிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதலே மரணத்திற்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூன்று காவலர்களைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.