நாவலபிட்டிய பாடசாலை வேன் விபத்தில் 13 மாணவர்கள் காயம்.!

99

நாவலபிட்டிய, கெட்டபுலாவிலிருந்து நாவலபிட்டிய நகரம் நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (05) காலை 7.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாவலபிட்டிய – திஸ்பனே சந்தி பகுதியில் இந்த வேன் வீதியை விட்டு விலகிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து நாவலபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 முதல் 10 வயதுக்குட்பட்ட 11 மாணவிகளும் 2 மாணவர்களும் அடங்குவர்.

வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லேகம் குமாரதுங்கவின் வழிகாட்டலில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.