பல கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டில் அமித் வீரசிங்க கைது!

27

“மஹசொன் பலகாய” அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது “அபினவ நிவஹல் பெரமுன” அமைப்பின் தலைவருமான அமித் வீரசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எல்ல மற்றும் திகன பகுதிகளில் “கபானா” தங்குமிட விடுதி திட்டம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

30 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் முதலீடு செய்த இருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிக லாபம் தருவதாக கூறப்படும் முதலீட்டு திட்டங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.