தென்பகுதி  ஆழ்கடலில் 150 கிலோ ஹெரோயின் பறிமுதல்.!!

149

இலங்கையின் தென்பகுதி ஆழ்கடலில் வியாழக்கிழமை (16) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோகிராமிற்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் போது படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 உர மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் வெளிநாட்டு கப்பல் ஒன்றின் மூலம் வழங்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பறிமுதல் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.