மும்பையை வீழ்த்திய பஞ்சாப் – 7 விக்கெட்டில் வெற்றி பெற்று முதலிடம்

82

மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி, மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

மும்பை அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரயான் ரிக்கெல்டன் (2) மற்றும் சூர்யகுமார் யாதவ் (0) விரைவில் அவுட்டானனர்.

பின்னர் நமன் திர் (50) மற்றும் குவின்டன் டி காக் (112) இணை சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டது. குறிப்பாக டி காக் 60 பந்துகளில் 112 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்தார்.

196 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (80) மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (66) இணை 3வது விக்கெட்டிற்கு 139 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கியது.

16.3 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப் அணி, இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.