அஸ்வெசும பயனாளர் பட்டியல் வெளியீடு; மேன்முறையீட்டுக்கு நவம்பர் 11 வரை அவகாசம்

30

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட முதற்கட்ட பயனாளர் பட்டியலில் 1,391,830 குடும்பங்கள் தகுதி பெறவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தகவல்களைப் புதுப்பித்த 2,383,630 குடும்பங்களின் விவரங்களைப் பரிசீலித்த பின்னர் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டப் பட்டியலில் 991,800 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன. இதில் தீவிர வறுமைப் பிரிவில் 363,142 குடும்பங்களுக்கும் மாதம் ரூ.17,500 வீதமும், வறுமைப் பிரிவில் 628,658 குடும்பங்களுக்கும் மாதம் ரூ.10,000 வீதமும் உதவித்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது பட்டியல் தொடர்பில் ஆட்சேபனை உள்ளவர்கள் ஒக்டோபர் 29 முதல் நவம்பர் 11 வரை மேன்முறையீடு செய்யலாம். பட்டியல்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன; அடுத்தகட்டப் பட்டியல் டிசம்பரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.