இத்தாலி ‘கரபினேரி’ படையில் இலங்கை வம்சாவளிப் பெண் தளபதியாக நியமனம்: வரலாற்றுச் சாதனை

175

இத்தாலி வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் மிக உயரிய ‘கரபினேரி’ (Carabinieri) இராணுவப் பொலிஸ் படையின் தளபதியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயதான பாக்யா சொலங்கா ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் வென்னப்புவையைப் பூர்வீகமாகக் கொண்டு இத்தாலியின் மிலன் நகரில் பிறந்து வளர்ந்த இவர், வணிகவியலில் பட்டம் பெற்றதுடன் சிங்களம், இத்தாலியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர் ஆவார்.

இத்தாலிய இளைஞர்களே திணறும் கடினமான நுண்ணறிவுத் தேர்வுகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அசால்ட்டாக முறியடித்த இவர், பயிற்சியின் போது வெளிப்படுத்திய அபார திறமைக்காக நேரடியாக ‘தளபதி’ (Commander) அந்தஸ்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றின் இத்தகைய பலம் வாய்ந்த பாதுகாப்புப் படையில், ஒரு இலங்கை வம்சாவளிப் பெண் தலைமைப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.