தங்கத்தின் விலை அதிகரிப்பு.!

79

நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (15) கொழும்பு, செட்டியார் தெருவில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 369,900 ரூபாவாக அறவிடப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை (11) இதன் விலை 366,200 ரூபாவாக இருந்ததைத் தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது.

அதேவேளை 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் 402,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.  கடந்த சனிக்கிழமை 398,000 ரூபாவாக இருந்த இதன் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.