இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் தாயகம் திரும்பினர்.

88

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்கள் செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

IRIS Dena கப்பல் அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது மீட்கப்பட்ட 32 வீரர்களும், IRIS Bushehr கப்பலில் இருந்த 204 மாலுமிகளும் இதில் அடங்குவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட இவர்கள், பின்னர் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் வெலிசறை மற்றும் கொக்கல தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து Meraj Airlines நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Iran-09’ என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் மாலை சுமார் 4.00 மணியளவில் இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்து, இரவு 8.35 மணியளவில் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை சர்வதேச மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எதிர்காலத்திலும் இத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.