அரச ஊழியர்களுக்குத் தவணை முறையில் 20 கிலோ அரிசி: அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு!

122

அரச ஊழியர்களுக்குத் தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் முன்மொழிவுக்கமைய, தலா 10 கிலோ வீதம் சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி ஆகிய இரு பொதிகள் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளன. இதற்காக அரச ஊழியர்களுக்கு விசேட வவுச்சர் ஒன்று வழங்கப்படும். இந்த வவுச்சரைப் பயன்படுத்தி சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரசாங்கம் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி, இந்த விநியோகத் திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.