20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 42 பேர் மருத்துவமனையில்..

142

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தியத்தலாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை (27) தியத்தலாவ தொடருந்து கடவை அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சுமார் 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 36 ஆண்களும் 6 பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிதுள்ளனர்.