சுரேஷ் சலே மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி..!

131

தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் விசேட மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.