யாழில் சொகுசு பஸ்சுக்குள் பரபரப்பு! அரச உத்தியோகத்தர் மீது மனைவி மற்றும் மகள் சரமாரி தாக்குதல்! 

54

யாழ்ப்பாணம் – அரியாலை நெடுங்குளம் சந்திப்பகுதியில் நேற்று இரவு அரங்கேறிய சம்பவம், சொகுசு பஸ்சில் பயணித்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்சில், 50 வயது மதிக்கத்தக்க அரச உத்தியோகத்தர் ஒருவர் யாழ் நகரப் பகுதியில் இருந்து ஏறியுள்ளார். அவர் அருகிலுள்ள இருக்கையையும் முன்கூட்டியே பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், 40 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் கச்சேரி பகுதியிலிருந்து பஸ்சில் ஏறியுள்ளார். இதையடுத்து சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பெண்கள் பஸ்சை வழிமறிக்க முயன்றுள்ளனர்.

பஸ்சை துரத்திய தாயும் மகளும்! பஸ் நிற்காமல் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும் அவரது 20 வயது மகளும் பஸ்சை தொடர்ந்து துரத்திச் சென்று, அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் பஸ்சை நிறுத்தியுள்ளனர்.

பஸ்சின் நடத்துனரைத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த இருவரும், அரச உத்தியோகத்தரையும் அவருடன் இருந்த பெண்ணையும் ஹெல்மெட் மற்றும் கைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

குறிப்பாக, அரச உத்தியோகத்தருடன் இருந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, கதறக் கதற தாக்கியதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் ஆவேசம்! அதேவேளை, “துரோகம்” தொடர்பான கோபத்தில் மனைவி தனது கணவனை திட்டியபடியே தாக்கியதாகவும், பஸ்சில் இருந்தவர்கள் பலமுறை தடுக்க முயன்றும் தாக்குதல் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இறுதியில், பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து நால்வரையும் கீழே இறக்கியதுடன், அவர்களது பயணப்பைகளையும் வெளியே தூக்கி வைத்துவிட்டு பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.