மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.!!

101

கலேவெல தலகிரியாகம பகுதியில், மகனைத் தேடிச் சென்ற 45 வயதுடைய தாய் ஒருவர் ஆழமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற 10 வயது மகள் காணாமல் போன நிலையில், சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, மகன் ([2026-06-28]) இரவு அருகிலுள்ள துபார வாவிக்குச் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், நள்ளிரவு கடந்தும் வீடு திரும்பாததால் தாய் தனது மகளுடன் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.

துபார வாவிக்கு அருகே இருள் சூழ்ந்த நிலையில் சென்றபோது, அங்கிருந்த ஆழமான விவசாயக் கிணற்றை கவனிக்காமல் தாயும் மகளும் அதில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் கலேவெல பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் தாயின் சடலம் மீட்கப்பட்டதுடன், 10 வயது சிறுமியைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படும் மகனின் நிலைமை குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மகனின் பாதுகாப்பு குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.