குளத்தில் மூழ்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!!

80

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 63 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (29) காலை சுமார் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில், வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜு (63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுதலின் பின்னர், அவரது சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.