டெங்கு காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழக மாணவி மரணம்.!!

128

ருஹுணு பல்கலைக்கழகத்தைச் (Ruhuna University) சேர்ந்த 23 வயதுடைய மாணவி சடலி (Sadali) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகச் சுற்றுப்பயணம் (Batch trip) மற்றும் கள விஜயங்கள் (Field visit) செல்லவிருந்த நிலையில், அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய இறுதி வாட்ஸ்அப் செய்தியில் தான் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், “நான் இறக்காவிட்டால் கண்டிப்பாக உங்களைப் பார்க்க வருவேன் நண்பர்களே” (“மங் நொமெருனோத் என்னம் யளுவனே ஒயாலவ பலலா யன்ன”) என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது எதிர்பாராத இந்த மரணம் அவரது குடும்பத்தினரிடையேயும், சக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.