கனமழையால் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு.

11

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திறக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் தெதுரு ஓயா, ராஜாங்கனை, குக்குலே கங்கை, கலா வாவி மற்றும் தப்போவ ஆகியவை அடங்குகின்றன.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்தில் திறக்கப்பட்டு, விநாடிக்கு 10,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலும் ஆறு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், குக்குலே கங்கை மற்றும் கலா வாவி நீர்த்தேக்கங்களிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுகிறது; தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறக்கூடும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஆற்றங்கரைகளிலும் நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகளிலும் வசிப்போர் நீர்மட்ட மாற்றங்களைக் கவனித்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.