வாங்கிய கடனை கேட்டதால் வந்த வினை – போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே மோதிக்கொண்ட பெண் பொலிஸார்!

155

மின்னேரியாவில் கடனுக்காகபெண் பொலிஸார் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய இடத்திலேயே, சக பெண் பொலிஸார் இருவர் “மல்யுத்தத்தில்” ஈடுபட்ட சம்பவம் மின்னேரியா காவல் நிலையத்தை அதிரவைத்துள்ளது.

வெறும் ஒரு “சிறு கடன்” தான் இந்த போர்க்களத்திற்கு வித்திட்டுள்ளது. ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய வாக்குவாதம், போகப்போக “சவுண்ட்” ஏறி, கடைசியில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

காவல் நிலையமே ரணகளமாகும் வகையில் மோதிக்கொண்ட இந்த இரு பெண் உத்தியோகத்தர்களும் காயமடைந்து, தற்போது மின்னேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“யூனிபார்ம்” அணிந்திருக்கும் போதே பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டதற்காக, இருவர் மீதும் தற்போது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன! மேல் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.