ஆசிய கடற்கரை விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்: நிபுணி வாசனா வரலாற்றுச் சாதனை.!!

86

சீனாவில் நடைபெற்று வரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், இலங்கை வீராங்கனை நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பெண்களுக்கான 50 கிலோகிராம் எடைப்பிரிவில் மற்போர் (Wrestling) போட்டியில் அவர் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை டொன் தி கிம் ஓன்ஹை 3-1 என்ற கணக்கில் வீழ்த்திய நிபுணி வாசனா, தொடக்க சுற்றுகளிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தன்னம்பிக்கை மற்றும் திறமையுடன் விளையாடிய அவர் இறுதிப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி தங்கத்தை உறுதி செய்தார்.

இந்த வெற்றி இலங்கை விளையாட்டுத்துறைக்கு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை பெண்கள் வீராங்கனைகளின் திறமையை வெளிப்படுத்திய இந்த சாதனைக்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.