சீமான் இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்திப்பு.!!

112

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்திப்பு மேற்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தமா? அல்லது எதிர்கால அரசியல் கூட்டணிக்கான முன்னோட்டமா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளன.

சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல், தமிழர் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா?” என்ற கேள்வியுடன் இந்த சந்திப்பு சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.