ஹட்டனில் ATM உடைக்கும் முயன்ற சந்தேகநபரை தேடும் பொலிஸார்.!!

130

ஹட்டன் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று அதிகாலை (04.05.2026) இடம்பெற்ற ATM உடைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து அங்கிருந்த இரண்டு ATM இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையிட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வங்கியின் பாதுகாப்பு அமைப்புகள் காரணமாக எந்தப் பணத்தையும் கைப்பற்ற முடியாமல் அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தின் முழுக் காட்சிகளும் வங்கியின் CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை வங்கி நிர்வாகம் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விரைவில் சந்தேகநபர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.