முல்லைத் தேர்வில் மாணவிய இலக்காகக் கொண்டு சங்கிலித் திருட்டு.!!

96

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில், டியூஷன் முடித்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிய உயர்தர மாணவி ஒருவரிடம் மாலை 3.30 மணியளவில் சங்கிலி பறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், மாணவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இழுத்து பறித்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்ததும் மாணவி அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்ததாகவும், குற்றவாளிகள் வேகமாக தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதே பகுதியில் கடந்த வாரமும் இதேபோன்ற சங்கிலி பறிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், CCTV காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான வாகனங்கள் அல்லது நபர்கள் குறித்து உடனடியாக தகவல் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.