கிளிநொச்சியில் அதிர்ச்சி: குழந்தையை விற்ற தாய் கைது.!

117
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் இடைத்தரகர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார், குழந்தையைக் கொள்வனவு செய்த நபரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.