DNA பரிசோதனைக்காக இரத்தம் வழங்குமாறு பல்லேகம தேரருக்கு நீதிமன்றம் உத்தரவு..!

25

ஜூன் மாதம் 16ஆம் திகதி அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்குச் சென்று, DNA பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் #இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, #சந்தேக நபரான முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன என்ற பிக்குவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரான பிக்கு தனது இரத்த மாதிரியை வழங்கிய பின்னர் மேற்கொள்ளப்படும் DNA பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தலைமை நீதவான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு மேலும் உத்தரவிட்டார்.

நிட்டம்புவ பொலிஸார் மேலதிக அறிக்கை ஒன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த விளக்கங்களைக் கருத்திற் கொண்டே அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அந்த மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்த நிட்டம்புவ பொலிசார், நீதிமன்ற உத்தரவுக்கமைய, DNA பரிசோதனைக்காக #சிறுமி ஒருவரால் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட, #இரத்தம் படிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடைகள் இதற்கு முன்னர் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வழக்குப் பொருட்களாக பெயரிடப்பட்டுள்ள அந்த இரத்தம் படிந்த ஆடைகள் தொடர்பாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் DNA பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த பொலிசார், அந்த #சிறுமியின் ஆடைகளில் DNA அல்லீல்கள் (DNA alleles) காணப்படுவது அந்த DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக #அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர்.