திடீரெனப் புரட்டிப் போட்ட மினி சூறாவளி: பரந்தன் பொதுச் சந்தைக்குக் கடும் சேதம்.!!   

128

இன்று வியாழக்கிழமை (30.04.2026) மாலை-05 மணியளவில் கிளிநொச்சி பரந்தனில் கடும் மழையுடன் வீசிய மினிசூறாவளிக் காற்றால் பரந்தன் பொதுச் சந்தை கடும் சேதங்களுக்குள்ளானது. இதன் காரணமாக 12 வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் மினி சூறாவளி காரணமாகப் பரந்தன் பொதுச் சந்தையின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.