கல்மடு சென் அன்ரனிஸ் கிண்ணம் உருத்திரபுரம் வசம்!

128

சென் அன்ரனிஸ் வெற்றிக் கிண்ணம் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்துக்கு.

கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன், கல்மடுநகர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் சிறப்பான ஆட்டத்தைக் காட்டி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

முதல் சுற்றுப் போட்டியில் திருநகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட உருத்திரபுரம் அணி, சுதர்சன் அடித்த ஒரே கோலின் மூலம் 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

அடுத்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டுக் கழகத்தை 6:1 என்ற கணக்கில் உருத்திரபுரம் அணி அபாரமாக வீழ்த்தியது. இதில் சுதர்சன் நான்கு கோல்கள் அடித்ததுடன், கிருசன் இரண்டு கோல்கள் சேர்த்தார்.

அரையிறுதிப் போட்டியில் இளந்தளிர் விளையாட்டுக் கழகத்துடன் மோதிய உருத்திரபுரம் அணி, 1:1 என சமநிலையில் முடிந்த போட்டியை சமநிலைத் தவிர்ப்பு முறையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதில் யானுசன் கோல் பதிவு செய்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கிளிநொச்சி ஸ்டார் ஈகில்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட உருத்திரபுரம் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தனுசன் அடித்த இரண்டு கோல்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதன் மூலம் சென் அன்ரனிஸ் வெற்றிக் கிண்ணத்தை உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தன்வசப்படுத்தியுள்ளது.