பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ சிப்பாய் பலி.!!

77

மாதுரு ஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியிலுள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், இராணுவச் சிப்பாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (17)  உயிரிழந்துள்ளதாக அரலகன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாதிவெல, ஜனககம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அரலகன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.