மதவாச்சியில் கால்வாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு.!

42

அநுராதபுரம் மதவாச்சி பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதநகரின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை ( 17) மதவாச்சி பொலிஸ் பிரிவின் வெஹரகல பகுதியிலுள்ள கால்வாய் பகுதிக்குச்  சென்றுள்ளனர்.

இதன்போது, பிரதேச வாசிகளது உதவியுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட நபரின் சடலத்தினை கால்வாயில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலத்தில் இடது கை மற்றும் வலது கால் ஆகியன் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மதவாச்சி நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்த பொலிஸார் அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.