அநுராதபுரம் காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை.!

40

அநுராதபுரம் பரசன்கஸ்வெவ புவரிசன்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை பரசன்கஸ்வெவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவின் புவரிசன்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று (17) சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சடலத்தினை பிரதேசவாசிகளது உதவியுடன் பொலிஸார் மீட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் 45 வயதுடைய மஹகுபுக்கொள்ளேவ, புவரிசன்குளம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.