தகிக்கும் வெப்பத்தைத் தணிக்க யாழில் பல முன்னேற்பாடான நடவடிக்கைகள்.!!

74

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கடும் வெப்பம் மற்றும் சூரியனின் நேரான உச்சம் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, நல்லூர் பிரதேச சபையினால் விசேட குடிநீர் விநியோகத் திட்டம் சாக்கினாலான நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

முதல் கட்டமாக திருநெல்வேலி சிக்னல் சந்தியில் வீதியில் சிக்கலான நிழல் குடை போன்று அமைத்து சிவப்பு லைற் பகுதியில் நிற்பவர்களுக்கு ஒரளவு நிழலை தரக்குடிய வகையில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளதுடன் நீர் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதசாரிகள் மற்றும் பயணிகளின் அவசர குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு பின்வரும் முக்கிய சந்திகளில் தற்காலிக நீர் தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன:

திருநெல்வேலிச் சந்தி, பரமேஸ்வராச் சந்தி, கொக்குவில் சந்தியில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தவிசாளரின் மயூரன் கருத்துதெரிவிக்கையில்,

தற்போது நிலவும் இடர்காலத்தைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக இந்த இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் மேலும் பல இடங்களுக்கு இச்சேவை விரிவாக்கப்படும். பொதுமக்கள் இக்குடிநீரினைத் தங்களின் குடிநீர் தேவைகளுக்கு மாத்திரம் மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.