காலி வெலிவத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 48 வயதுடைய நபர் உயிரிழப்பு.!

177

காலி – வெலிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) மாலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வெலிவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த நபர் கடந்த 04ஆம் திகதி இரவு மதுபோதையில் தலையில் காயத்துடன் வீட்டிற்கு வந்து உறங்கியதாகவும், மறுநாள் காலை அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்தின் உண்மை காரணத்தை கண்டறிய காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.