வத்தளை மெழுகு துணி தொழிற்சாலையில் தீப்பரவல்.!

226

வத்தளை – மாபோல, தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகு துணி (Rexine) தொழிற்சாலை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (06.04.2026) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் 03 தீயணைப்பு வாகனங்களும் 13 தீயணைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீப்பரவல் ஏற்பட்ட காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.