மசாஜ் நிலையம் பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 08 பேர் கைது.!!

319

சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, விடுதியின் முகாமையாளர் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முகாமையாளர் படபொல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், 07 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வயது 22 முதல் 39 வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கந்தானை, கம்பஹா, கினிகத்தேனை, மாத்தளை, குருணாகல், பதுளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்காலத்தில் இந்த விடயத்தில் மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.