அயதுல்லா அலி கமெனியின் நல்லடக்கம் தொடர்பில் வெளியான தகவல்.!

140

ஈரானின் உயர்ந்த தலைவர் அயதுல்லா அலி கமெனி புனித நகரமான Mashhad நகரில் அடக்கம் செய்யப்படுவார் என்று Fars News Agency செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் உயர்ந்த தலைவர் அயதுல்லா அலி கமெனி ஈரான் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளார். மேலும் 40 நாட்கள் ஈரானில் துக்கதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

86 வயதில் உயிரிழந்த காமெனெய், 36 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தியவர்.அவர் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமானமஷ்ஹத் நகரத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை Imam Reza shrine வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அடக்கம் செய்யப்படும் திகதி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.