சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்களில் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.!!

29

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்களில் 21,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மொத்தம் 5,696 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 பிரதேச செயலகப் பிரிவுகளில் கனமழை மற்றும் பலத்த காற்றின் தாக்கம் பதிவாகியுள்ளது.

இந்த அனர்த்தங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்; மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதுடன், 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 173 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அர்னாப்’ புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இலங்கையில் அதன் தாக்கம் குறைந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.