வீட்டில் சிக்கிய ஆபத்தான ஆயுதங்கள்!

94

 

குருநாகல், குளியாபிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கந்தகெதரவில் உள்ள வலக்கும்புரமுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (12) சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கிகள், வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஒரு கையெறி குண்டு மற்றும் BMG ரகத்தைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வலக்கும்புரமுல்ல, குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன, அவற்றை எந்த நோக்கத்திற்காக வைத்திருந்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.