‘100% வெற்றி’ என்ற வரலாற்றை எழுதிய உருத்திரபுரம் மகா வித்தியாலயம்!

179

கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனையொன்றைப் படைத்துள்ளது.

இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து, 100 வீதம் உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர். மேலும், பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திலுள்ள 43 பாடசாலைகளில் முதலிடத்தைப் பெற்று பாடசாலை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த சிறப்பான சாதனைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

கல்வித் துறையில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தின் இந்த வெற்றி, பாடசாலை சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், எதிர்கால மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது.