தெல்தெனிய பெண் கொலையின் பிரதான சந்தேகநபரான காதலன் யாழில் கைது!

120

கண்டி தெல்தெனிய பகுதியில் சொகுசு காருக்குளிருந்து 34 வயதான பெண் இயன்முறைச் சிகிச்சையாளர் (Physiotherapist) சடலமாக மீட்கப்பட்ட கொடூரக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலனும், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தை ஆகியோர் இன்று காலை (24.06.2026) யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி தெல்தெனிய பகுதியில் அண்மையில் காரொன்றுக்குள்ளிருந்து இளம்பெண் இயன்முறைச் சிகிச்சையாளர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் தலைமறைவாகியிருந்த பெண்ணின் காதலனை யாழில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த ஜோடி கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் பதுங்கியிருந்து பின்னர் கடல் வழியாக இரகசியமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நாடு முழுவதும் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி 2 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்தவனாவான். மேலதிக விசாரணைகளை தெல்தெனியப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.