மாணவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு -யுவதியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட  இளைஞன்.!!

49

கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பதின்ம வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அயல் வீட்டைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர், அவர் 19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.