கொழும்பில் ஆறு பேரில் உயிரை பலியெடுத்த கோர விபத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

55

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ள கோர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு (31) சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்திருந்தனர்.

மீகொட சந்திப்பில் உள்ள தானசாலை வரிசையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடகைக் காரின் உரிமையாளருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விபரங்களை இன்று (02) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர், மீகொட பொலிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து நடந்த நேரத்தில் வாகனத்திலிருந்து தப்பியோடிய வாடகைக் காரின் உரிமையாளர் உட்பட இருவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையை தொடங்கியுள்ளன.