UK-இல் கள்ளர்களை கடைக்குள் பூட்டி ‘சிங்கப்பெண்ணாக’ மாறிய இலங்கைத் தமிழ் பெண்.!

59

இங்கிலாந்தின் வடக்கு ஷீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு மினி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர், கடைக்குள் திருட முயன்ற இருவரை உள்ளே பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை உரிமையாளரான 31 வயது கம்ஷா சிவகரன், தனது கடையில் நுழைந்த ஆண் மற்றும் பெண் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதை கண்டபோது இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தனது கடை இனவெறி தாக்குதல்கள் மற்றும் திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்றைய தினம் மீண்டும் திருட முயன்றவர்கள் கடைக்குள் இருந்தபோது, அவர் வெளியேறி கதவுகளை பூட்டி ஷட்டரையும் இறக்கியுள்ளார். இதனால் உள்ளே சிக்கிய இருவரும் பொருட்களை சேதப்படுத்தியதுடன், ஆபத்தான திரவம் ஒன்றையும் பயன்படுத்தியதாகவும், பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக பிரித்தானிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேவேளை, ஏற்பட்ட சேதத்தால் கடை உரிமையாளர் தனது தொழிலை தொடர்வது குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரது துணிச்சலான நடவடிக்கை பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.