நயினாதீவு கடலில் சோகம் – பாடசாலை அதிபர் உயிரிழப்பு..! 

41

நயினாதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் நயினாதீவை சேர்ந்த, நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலத்தின் அதிபரான நடராசா மயூரன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவல்களின் படி, அதிபரும் மற்றொரு ஆசிரியரும் பயணிகள் படகை தவறவிட்டதால், கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகில் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர்.

அந்த நேரத்தில் கடும் காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படகு பலமாக அலைகளில் தாக்கப்பட்ட நிலையில், அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.

உடனடியாக படகோட்டி அவரை மீட்க முயன்றபோதிலும், துரதிஷ்டவசமாக அதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.