கம்பளையில் சோகம்: பரண் உடைந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு.!

49

கம்பளை பகுதியில் பொருட்கள் வைப்பதற்காக கூரையோடு இணைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து நீர் குழாய் ஒன்றை எடுப்பதற்கு சிறுவனின் தந்தை முயன்றுள்ளார்

விபத்து: அப்போது பரணில் இருந்த பலகை திடீரென உடைந்து, அவர் கீழே இருந்த 3 வயது சிறுவன் மீது விழுந்துள்ளார்

உயிரிழப்பு: இந்த விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்

விசாரணை: உயிரிழந்த சிறுவனின் உடல் தற்பொழுது கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கம்பளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்