நல்லூர்ப் பிரதேச சபையின் மற்றொரு முன்மாதிரியான பணி!   

96

யாழ். மாவட்டத்தின் முக்கியமான பொதுச் சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு நல்லூர்ப் பிரதேச சபையினரால் புதிதாகச் சந்தைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள சந்தைக் கண்காணிப்பாளர்களுக்குப் பிரத்தியேகச் சீருடை வழங்கப்பட்டு இன்று (09.05.2026) தொடக்கம் திருநெல்வேலிப் பொதுச்சந்தை மற்றும் அதன் சுற்றுப் புறத்தைக் கண்காணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் விவசாயிகளும், பொதுச் சந்தையில் ஏற்படுகின்ற இடர்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்களும் மேற்படி சந்தைக் கண்காணிப்பாளர்களிடம் முறையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்மாதிரியான பணி…. நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்துக்குப் பாராட்டுக்களும், புதிதாக நியமிக்கப்பட்ட சந்தைக் கண்காணிப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும்!