ஒரே பதவியேற்பில் சாதனை… கீர்த்தனாவுக்கு குவியும் பாராட்டு!

215

சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை (10.05.2026) நடைபெற்ற தமிழகத்தின் புதிய முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட அமைச்சரவையின் பதவியேற்பு விழா பெரும் கவனத்தை ஈர்த்தது.

அந்த அமைச்சரவையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தனா, வெறும் 29 ஆவது வயதில் அமைச்சராகப் பதவியேற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இளம் வயதில் அமைச்சரான பெண்மணி என்ற பெருமையுடன் மட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பெண் அமைச்சர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

அரசியலில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக கீர்த்தனாவின் நியமனம் பார்க்கப்படுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.