சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்! 700 மாணவிகளின் அந்தரங்கங்கள் மீட்பு!

170

டெலிகிராம் வழியாக இளம் பெண்களை குறிவைத்து மிரட்டல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் 24 வயது இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த நபர், பிபில பகுதியில் உள்ள இளம் பெண்ணை மிரட்டிய புகாரின் அடிப்படையில் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரது செயல்பாடுகள் தொடர்பான பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சந்தேகநபரின் கைபேசி பரிசோதனையில், 700க்கும் மேற்பட்ட மாணவிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இளைஞன் முதலில் நட்பு ஏற்படுத்தி, பின்னர் அவர்களின் புகைப்படங்களை மாற்றி அமைத்து, “பணம் தரவில்லை என்றால் வெளியிடுவேன்” என மிரட்டி மேலும் தகவல்கள் மற்றும் படங்களைப் பெற முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னை அடையாளம் காண முடியாத வகையில் போலி தகவல்களை பயன்படுத்தியும், அழைப்புகளை கட்டுப்படுத்தியும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சமூக வலைத்தள பாதுகாப்பு குறித்து மீண்டும் எச்சரிக்கை எழுப்பியுள்ள நிலையில், பொதுமக்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.