ஆடையில் மறைத்து 30 அரிய ஆமைகள் கடத்தல் ; இளம்பெண் கைது.!

116

தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில், 19 வயது இளம்பெண் ஒருவர் தனது உடலில் ஒட்டுநாடா மூலம் 30 இந்திய நட்சத்திர ஆமைகளை கட்டி கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் 29 ஆமைகள் உயிருடன் இருந்த நிலையில், ஒன்று இறந்த நிலையில் இருந்தது.

சர்வதேச கறுப்புச் சந்தையில் இவ்வாமைகளின் மதிப்பு சுமார் 9,000 அமெரிக்க. டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.