செம்மணி புதைகுழியில் நாணயக் குற்றியுடன் மனித எலும்புக்கூடு மீட்பு – எண்ணிக்கை 240 ஆக உயர்வு.

168

செம்மணி மனித புதைகுழியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில், வியாழக்கிழமை மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை அகழ்வில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய அகழ்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.

மேலும், புதன்கிழமை அகழ்வின் போது சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மண் கண்டறியப்பட்டதால் அதனை சோதனை செய்தபோது, அதன் உள்ளிருந்து ஒரு நாணயக் குற்றி மீட்கப்பட்டது. இது தற்போது சான்றுப் பொருளாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.