வடமாகாண காணி பிரச்சினை: அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரிக்கை.!

155

வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினராலும் மற்றும் அரச திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகளை உடனடியாக மக்களிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அமைப்புகள் கைப்பற்றியுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவர் விஜித றோகன் பெணான்டோ அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

27 ஏப்ரல் 2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டைக்காடு கப்பல் ஏந்தி மாதா தேவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் நில உரிமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர்.

காணி விடுவிப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அது வடமாகாணத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வாக அமையும் என்றும் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.